பொளி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. (உளியால் செய்த) துளை
  2. (மண்வெட்டி போன்றவற்றால்) வெட்டிய ஒரு வெட்டு (வெட்டு பட்ட நிலையைக் குறிக்கும்)
  3. வரம்பு (மண்வெட்டி முதலானவற்றால் வெட்டப்பட்டு அமைந்த வரம்பு)
  4. பாய் முடைவதற்கு வகிர்ந்து வைக்கும் ஓலை
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்
விளக்கம்

துளைத்தல், வெட்டுதல், கிழித்தல், கீறுதல் என்பது அடிப்பொருள். இதன் அடிபடையில் தோன்றுவன பிற பொருள்கள். எ.கா. ஓலையின் நரம்பை (ஈர்க்கை) வகிர்ந்து நீக்கியபின் உள்ள ஓலை மடல் பாய் முடைவதற்குப் பயன்படும். எனவே வகிர்ந்து (கீறி, கிழித்து) நீக்கப்பட்ட ஓலையைக் குறிக்கின்றது. வெட்டப்பட்ட துளை, வெட்டப்பட்ட வரம்பு, வெட்டப்பட்ட மண் என்று பெறுகின்ற்து.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  • கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொளி&oldid=1069945" இலிருந்து மீள்விக்கப்பட்டது