பொருள்

போலும் (இ)

  • ஒப்பில் போலியாக வரும் உரையசை
விளக்கம்
  • ஒப்புமை இல்லாத போலி, ஒப்புமை இல்லாத உவமை
பயன்பாடு
  • "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (திருக்குறள் 399)
உறங்குவது சாக்காடு அன்று. போன்றதும் அன்று. கனவில்லா உறக்கம் சாக்காடு போன்றது என்றாலும் பிழையாகிறது. உறக்கத்தில் மூச்சோட்டம் இருக்கிறது. சாக்காட்டில் மூச்சோட்டம் இல்லை. எனவே இது ஒப்பில்போலி.
இலக்கணம்
"ஒப்பில் போலியும் அப் பொருட்டு ஆகும்" (தொல்காப்பியம் 2-7-30) (அப் பொருட்டு - உரையசை தொல்காப்பியம் 2-7-29)
"https://ta.wiktionary.org/w/index.php?title=போலும்&oldid=998534" இலிருந்து மீள்விக்கப்பட்டது