மக்கட்செல்வம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மக்கட்செல்வம், .

பொருள்

தொகு
  1. புத்திரைசுவரியம்
  2. புத்திரபாக்கியம்
  3. மக்கட்பேறு
  4. குழந்தைப்பேறு
  5. குழந்தைபாக்கியம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Children-considered as one of sixteen kinds of riches/wealth that one should have...

விளக்கம்

தொகு
  • மக்கள் + செல்வம் = மக்கட்செல்வம்...நல்ல சந்ததிகள் உடைமை (குழந்தைகள்/பிள்ளைகள்) மனிதருக்கு வேண்டிய பதினாறு பேறுகளில்(பாக்கியங்களில்)ஒன்றாகக்கருதப்பட்டது...ஒருவரின் பரம்பரை (வம்சம்) தொடருவது ஆண் பிள்ளைகளின் வழியாகவே என்பதால் இந்த மக்கட்பேறுக்கு புத்திரன் என்னும் ஆண் குழந்தைகளையே முன்நிலைப்படுத்தி புத்திரைசுவரியம்,புத்திர பாக்கியம் எனப் பெயரிட்டு அழைத்தது மரபு...மக்கட் பேறு,குழந்தைப் பேறு,குழந்தை பாக்கியம் போன்ற இருபால் பொதுப் பெயர்களும் வழக்கத்தில் இருக்கின்றன...மற்ற பதினைந்து பேறுகள் 1.கல்வி, 2.புகழ்,3.வலி என்னும் பெரும்வலிமை, 4.வெற்றி, 5.பொன் அதாவது பொருட்செல்வம், 6.நெல் அதாவது நல்ல உணவு,7. நல்லூழ் அல்லது முற்பிறப்பில் செய்த நல் வினைகள், 8.நுகர்ச்சி அதாவது நல்ல புதுப்புது அனுபவங்கள், 9.அறிவு,10. அழகு, 11.பொறுமை, 12.இளமை, 13.துணிவு, 14.நோயின்மை, 15.நீடித்த வாழ்நாள் ஆகியவையாகும்..


( மொழிகள் )

சான்றுகள் ---மக்கட்செல்வம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மக்கட்செல்வம்&oldid=1222721" இலிருந்து மீள்விக்கப்பட்டது