தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மயக்குதல், பெயர்ச்சொல்.
  1. மனங்குழம்பச் செய்தல்
    (எ. கா.) குறளைபேசி மயக்கி விடினும் (நாலடி. 189)
  2. பிரமிக்கச்செய்தல்
    (எ. கா.) மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8, 7, 4)
  3. பரவசமுறச் செய்தல்
    (எ. கா.) மயக்கிய முயக்கந் தன்னால் (கம்பரா. இராவணன்சோ. 51)
  4. கலத்தல்
    (எ. கா.) பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34)
  5. சேர்த்தல்
    (எ. கா.) உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189,4)
  6. சிதைத்தல்
    (எ. கா.) எருமை கதிரொடு மயக்கும் (ஐங்குறு. 99 )
  7. நிலைநெகிழ்த்துதல்
    (எ. கா.) வள்ளை யாய்கொடி மயக்கி (அநா. 6)
  8. ஊட லுணர்த்துதல்
    (எ. கா.) மயக்கிய வருதிமன் (கலித். 73)
  9. முர்ச்சையுறச் செய்தல்
    (எ. கா.) மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ...துகைத்தான் (கம்பரா. மகுட.5)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To bewilder, confuse
  2. To puzzle, mystify; to make one wonder
  3. To unite, join, as a wick with the oil in a can
  4. To fascinate, allure, charm
  5. To mix up
  6. To ruin, destroy
  7. To disturb, unsettle
  8. To clear one's misunderstanding, as in sulks
  9. To make one swoon


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயக்குதல்&oldid=1340191" இலிருந்து மீள்விக்கப்பட்டது