மறுபிறவி
பொருள்
மறுபிறவி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- reincarnation
- rebirth
- state of survival after a deadly disease/bloody accident
விளக்கம்
- இந்துக்களின் ஒரு திட நம்பிக்கை மறுபிறவி...மனிதனுக்கு இறத்தல் தவிர்க்க முடியாதது...அப்படி இறக்கும்போது அவன் கதை அதோடு முடிவதில்லை...மறுபடியும் உலகில் பிறவி எடுக்கிறான்...இதுதான் மறுபிறவி...மனிதன் இறக்கும்போது உடல்தான் அழிகிறது... அந்த உடலினுள் இருந்துக்கொண்டு மரிக்கும்வரை அதை இயக்கிய ஆன்மா அழிவதில்லை...அந்த ஆன்மா, தான் வெளியேறிய அந்த மனித உடலோடுக்கூடிய வாழ்க்கையில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட வேறொரு உயிரின உடலில் புகுத்தப்பட்டு மீண்டும் இவ்வுலகில் பிறந்து வாழத்தொடங்குகிறது என்னும் தத்துவமே மறுபிறவித் தத்துவமாகும்...அதாவது மனிதன் தன் சட்டைகளை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல ஆன்மா தன் உடல்களை ஆண்டவன் சித்தத்திற்கேற்ப மாற்றிக் கொண்டிருக்கும் என்பதாகும்...புத்த மதத்திலும் மறுபிறவி கொள்கை உள்ளது...
- நடைமுறை வாழ்க்கையில் பெரிய/உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து உயிர்பிழைத்தவர்களும்,கொடிய விபத்துக்களிலிருந்து உயிர் மீண்டவர்களும் 'நான் மறுபிறவி எடுத்தேன்' என்று சொல்லுவது வழக்கமாக இருந்துவருகிறது...
பயன்பாடு
- அந்த ஆண்டிப்பயல் செய்திருக்கும் பாவங்களுக்கு,பிறருக்கிழைத்த கொடுமைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்...ஆண்டவன் சும்மா விடமாட்டார்...அவன் புழு, பூச்சியாகத்தான் மறுபிறவி எடுப்பான்...
- சுப்பய்யா அந்தப் புற்று நோயிலிருந்து மீண்டதும், அவருடைய மகன் கண்ணையா சாலை விபத்திலிருந்து பிழைத்ததும் மறுபிறவிதான்...