முருந்து
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முருந்து, பெயர்ச்சொல்.
- பூவின் தாள்
- (எ. கா.) பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6)
- இறகினடிக்குருத்து
- மயிலிறகினடிக்குருத்து.
- முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7)
- தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.)
- கொழுந்து. (சங். அக.)
- இளந்தளிர்
- வேரின் மேற்றண்டு.
- பைஞ் சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62)
- இளவெலும்பு
- எலும்பு
- முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661)
- வெண்மை. (சூடா.)
- முத்து
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - muruntu
- stalk of flower
- Quill of a feather
- Root of peacock's feather
- White and fresh sprout of a palm
- Tendril
- Tender leaf
- Stalk of plant just above the roots
- Cartilage, tendon;
- Bone
- Whiteness
- Pearl
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +