மெனோரா
மெனோரா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (யூதர்கள் வழக்கப்படி) திருவிளக்குத் தண்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- menorah
- (எபிரேய மூலம்) מְנוֹרָה
விளக்கம்
யூதர்கள் வழிபாட்டின்போது இரு வகையான விளக்குத் தண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஒன்று கோவில் விளக்குத் தண்டு என அழைக்கப்படுகிறது; ஏழு கிளைகள் கொண்டது. மற்றது ஒளிவிழா (அர்ப்பணவிழா) விளக்குத் தண்டு என்னும் பெயரால் அறியப்படுகிறது. அதற்கு ஒன்பது கிளைகள் உண்டு. இந்த விளக்குகளுக்குத் தூய ஒலிவ எண்ணெய் பயன்படுத்துவர்.
பயன்பாடு
- பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய்...விளக்குத் தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் செல்லும் (விடுதலைப் பயணம் 25:31,32) திருவிவிலியம்
- எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம் (யோவான் 10:22)திருவிவிலியம்
உசாத்துணை
தொகுmenorah ஆங்கில அகராதிகள்