லேவாதேவி
பொருள்
லேவாதேவி, .
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் money lending
விளக்கம்
- அதிகமான வட்டிவிகிதத்துக்கு கடன் கொடுத்து வாங்கும் தொழில் லேவா தேவி என்றழைக்கப்படுகிறது. ” கொடுக்கல் வாங்கல்" என்றும் பொருள்படும். இந்தி மொழியிலிருந்து வந்த திசைச்சொல். இந்தி மூலம் ' லேனா தேனா' (लेना देना) என்பதாகும்.
பயன்பாடு
- இதனால் திரு. மாரிமுத்து ஆசாரியாரிடத்தில் நமக்கு மரியாதை குறையவில்லை. மேலும் இவர் யாரிடத்தில் அடிக்கடி லேவா தேவி செய்து கொண்டு இருக்கின்றாரோ அவர்களே...... அந்த சேட்டுமார்களே வேண்டியது துகையை ஜாமீனாக கொடுக்க வந்ததும் திரு. ஆசாரியார் அவர்களின் யோக்கியதையை வெளிப்படுத்து கின்றது(பெரியார், குடி அரசு - மே 1931)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +