ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

வடுகர், (பெ)

  1. பைரவர்
    • பிங்கல நிகண்டு
      வடுக னின்னவை வயிரவன் பெயரே (2, 23)
  2. ஒரு சங்ககாலச் சமூகம்
    • அகநானூறு
      நேரா வன்தோள் வடுகர் பெருமகன் (253)
      தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் (295)
  3. பிரம்மச்சாரி
  4. இறைவனின் போற்றிகளில் ஒன்று (வடுகநாதர்)
வடுகர் - இறைவன் பைரவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Bhairava
  2. people of an old Tamil community
  3. a celibate
  4. a name of Lord Shiva
விளக்கம்

வடுகர் சொல் காரணம்

  • சமுக வரலாற்றின்படி:
தமிழக வடகோடி எல்லைப் பகுதியான வடக்கு நாட்டு மக்களை வடுகர் என்றுக் குறிப்பிடுவர். வடுகு என்றாலே வட எல்லைப் பகுதிகள் என்றுப் பொருள்...ஆகவே அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்களும் வடுகர் ஆயினர்....தமிழக வரலாற்றில் விசயநகர நாயக்க மன்னர்கள் அனைவரும் வடுகர்கள் என்றே குறிப்பிடப்பட்டனர்...அவர்கள் ஆண்ட ஊர்களின் பெயர்களிலும் 'வடுகு' என்றச் சொல்லைக் காணலாம்...
  • புராணங்களின் படி:
பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு...அப்போது பிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான்முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்க வேண்டும்...திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாக விளங்கியதாலும், ஐந்து தலைகளுடன் வதரித்தாலும் உலக இரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன்...அதோடு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்...இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள்...சினம் கொண்டார்... சிவபெருமான்...பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார்...தனது  சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி வரும்படி  ஆணையிட்டார்...வீராவேசத்துடன் புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார்.. இந்த பைரவர் அம்சமே வடுகதேவர்..... புராணத்தில் சொல்லப்பட்டத் தகவல் இது.
பயன்பாடு
  • பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி:
ஒருமுறை சேர நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் வண்டிகளில் மிளகு மூட்டைகளை எடுத்துப் புறப்பட்டனர். இரவு நேரம் நெருங்கவே இந்த வனத்தில் தங்கிவிட்டு மறுநாள் புறப்படத் தீர்மானித்தனர். அப்போது இலந்தை மரத்தின் அடியில்  குடிகொண்டிருந்த பைரவர் கிழ வடிவம் எடுத்து மிளகு வியாபாரி ஒருவரை நெருங்கினார். உடல் நிலை சரியில்லை, கஷாயம் வைக்க வேண்டும். நீங்கள் கொண்டு வந்த மூட்டையில் இருந்து சிறிது மிளகு எடுத்துத் தாருங்கள் என்றார். வியாபாரிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே மூட்டைக்குள் இருப்பது மிளகு இல்லை, பாசிப்பயறு என்றார். கிழவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தார். நாட்கள் ஓடின. மதுரைக்குப் போய்ச் சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் ஒரு விலை பேசி சரக்குகள் அனைத்தையும் விற்றனர். மூட்டைகளை எடுத்துக் கிடங்கில் அடுக்குவதற்கு முன் அரண்மனைச் சிப்பந்தி ஒருவனிடம், ஒரு  மூட்டையைப் பிரித்து உள்ளே இருப்பது மிளகுதானா என்று சோதிக்கும்படி, பாண்டிய மன்னன் சொன்னான். அதன்படி சிப்பந்தி ஒரு மூட்டையைப் பிரிக்க, உள்ளே இருந்தவை பாசிப்பயறு. மிளகு வியாபாரிகளுக்கோ வியர்த்துவிட்டது.  முகம் சுளித்த மன்னன், வேறொரு மூட்டையைப் பிரித்துப் பார்க்கச் சொன்னான். அதிலும் பாசிப்பயறு. இப்படி எல்லா மூட்டைகளிலுமே பாசிப்பயறு இருப்பதைக் கண்ட மன்னன், சேர நாட்டு வியாபாரிகள் தன்னை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லி, அவர்களுக்குத் தண்டனை தரத் தீர்மானித்தான். அப்போது, பைரவரின் திருவிளையாடல் நிகழ்ந்தது. எந்த வியாபாரியிடம் பைரவர் மிளகு கேட்டாரோ, அவருக்கு திடீரென சாமி வந்தது. மிளகு மூட்டைகளை பாசிப்பயறு ஆக்கியது. நான்தான்டா என்றார் அந்த வியாபாரி. மற்றவர்கள் நம்பினாலும் மன்னன் இதை நம்பத் தயார் இல்லை. எனவே சாமி ஆடிய செட்டியாரைப் பார்த்து “எனக்கு இருப்பது இரண்டு குழந்தைகள். பெண்ணுக்கு வாய் பேச முடியாது. பையனுக்கு  நடக்க முடியாது. இந்த இரு குழந்தைகளையும் நீ குணப்படுத்தினால் நீ சொல்வதை நான் நம்புகிறேன்” என்றார். நான் குடிகொண்டிருக்கும் புற்றை அழித்து என்னை சந்நிதியில் குடியேற்று; அபிஷேகங்கள் செய்; மிளகு சாற்றி வழிபடு; உன் குழந்தைகளைக்  குணப்பத்துகிறேன்” என்று வியாபாரி வடிவில் வந்த பைரவர் சொன்னார்.  பாண்டியமன்னனும் அதை சிரமேற்கொண்டு சேரநாட்டு எல்லைக்கு வந்தான். இலந்தை  மரத்தின் அடியில் புற்றில் குடி கொண்டிருக்கும் பைரவரை வெளியே எடுத்தான்.  மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தான். பைரவருக்கு மிளகு சாற்றி வழிபட்டான். பைரவர் அருளியபடியே, எட்டுநாட்களில் மன்னனின் குழந்தைகள் நலம் பெற்றன. இதனால் இந்த பைரவரை “பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி” என்றும் அழைப்பது  உண்டு. குண்டடம், திருப்பூர் மாவட்டத்தில் அருள்மிகு காலபைரவ வடுகநாதர் என்ற கோவிலுள்ளது. அந்த கோவில் கல்வெட்டில் உள்ள வரலாறே இது. இதனால்தான் காலபைரவரின் சொரூபமாகிய சிவபெருமானை வடுகநாதன் என்று அழைக்கிறார்கள்.

  • ஆதாரம்...சமூகச் சார்பானவற்றிற்கு...[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடுகர்&oldid=1984379" இலிருந்து மீள்விக்கப்பட்டது