தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாடுதல், பெயர்ச்சொல்.
  1. உலர்தல்
    (எ. கா.) பொதியொடு பீள்வாட (நாலடி.269)
  2. மெலிதல்
    (எ. கா.) எந்தோள் வாட (கலித். 68)
  3. மனமழிதல்
    (எ. கா.) வாடினேன் வாடி வருந்தினேன் (திவ். பெரியதி. 1.1.1)
  4. பொலிவழிதல்
    (எ. கா.) குழலியென் வாடிப் புலம்புவதே (திருக்கோ.14)
  5. தோல்வியடைதல்
    (எ. கா.) வாடாவஞ்சி தலைமலைந்து (பு. வெ. 3.1. கொளு)
  6. கெடுதல்
    (எ. கா.) காரிகை பெற்றதன் கவின்வாட (கலித். 124)
  7. நீங்குதல்
    (எ. கா.) சூலமும் . . . கரத்தினில் வாடாதிருத்தி (கல்லா. 87.29)
  8. குறைதல்
    (எ. கா.) வாட்டருஞ்சீர்க்கண்ணகி நல்லாளுக்கு (சிலப். 9.40)
  9. நிறைகுறைதல்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To wither, fade, dry up
  2. To be emaciated; to become weak
  3. To pine away, grieve
  4. To turn pale
  5. To be defeated
  6. To perish
  7. To be removed
  8. To diminish, decrease
  9. To fall short in weight


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாடுதல்&oldid=1339974" இலிருந்து மீள்விக்கப்பட்டது