வார்ப்புரு பேச்சு:=ஆங்=

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
  • இதனை பயன்படுத்தும் போது, வரும் அடுத்தவரி இடைவெளியுடன் இருக்கிறது. நெருக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? (எ.கா) unmute--(த*உழவன் 06:49, 11 ஜூன் 2010 (UTC))
unmute என்னும் பக்கத்தில் இட்டிருக்கும் வடிவில் சில இடர்கள் உள்ளன. தொகு என்னும் தொடுப்பு தனியாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் (இது தேவை இல்லை என்பது என் கருத்து. ஏனெனில், மொழிபெயர்ப்புகளுக்கு என ஒரு தனிப்பகுதி (பல நெடுக்குப்பத்திகளுடன்) வரும். அல்லது பிற மொழிகளுக்கான தனித்தனி உட்பகுதிகள்/பிரிவுகள் ஏற்படும் பொழுது அங்கு ஏற்படுக்கிக்கொள்ளலாம். ஆனால் கட்டாயம் தொகு என்பது இருக்கவேண்டும் எனில், அப்பக்கத்தில் அல்லது அப்பகுதியில், == == என்று ஒரு வரியில் இட்டுவிட்டு, அடுத்த வரியில் {{=ஆங்=}} என்று இட்டால் போதும். ஆனால் கூடுதலாக ஒரு வரியும் அடுத்து ஒரு இடைவெளியும் (/கிடைவெளியும்) வரும்தான். எ.கா sura. அருள்கூர்ந்து மீண்டும் ஆங்கிலம் என்னும் மேல் வரியை இணைக்காதீர்கள். மொழிப்பட்டையின் நோக்கமே வலுவிழக்கின்றது. --செல்வா 16:34, 11 ஜூன் 2010 (UTC)
மிகப்பெரும்பாலும் விக்சனரி பக்கம் ஒரு பக்கத்துக்கு மீறாது. ஆகவே அந்த தொகு என்னும் தொடுப்பு தேவை இல்லை. பக்கம் முழுவதுக்குமான தொகுப்பே போதுமானது. ஏதோ சில பக்கங்களில் மேலே நான் சுட்டியவாறும் செய்யலாம்.--செல்வா 16:41, 11 ஜூன் 2010 (UTC)
  • ஆம்.விக்சனரி பக்கத்திற்கு மேலுள்ள, ஒரு 'தொகு' வசதியே போதுமானாது. படங்களை கையாளும் போது, இவ்வசதியே சில குழப்பங்களைத் தவிர்க்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் கையாளுவது எளிது. நான் இங்கு வந்த போது, வலப்பக்கம் நிறைய 'தொகு' நின்று குழப்பத்தைத் தந்தது.
மேலும், ஆத்திச்சூடி போல, ஒரே வரியிலும் சில விவரங்களை அமைக்க ஆவலாக இருக்கிறேன். இதற்கு முன் பலவிதமான வடிவங்களைக் கையாண்டேன். உங்களோடு நடந்த உரையாடல்களால், மனத்தெளிவு ஏற்பட்டிருக்கிறது. படிப்படியாக எனது முந்தைய பதிவுகளை, ஒரே வடிவத்திற்கு மாற்றுவேன். ஏனெனில், அம்முறையே தானியங்கியால் வடிவச்சீரமைக்க ஏதுவாகவும், எளிதாகவும் இருக்கிறது.மிக்க நன்றி.(த*உழவன் 23:24, 11 ஜூன் 2010 (UTC))
நன்றி.--செல்வா 00:58, 12 ஜூன் 2010 (UTC)
  • இப்பக்க முதல் வரியில் கேட்டு கொண்டபடி, மொழிப்பட்டைக்கு அடுத்துவரும் வரியுடனான இடைவெளியை நீக்கி விட்டேன். கணினி தொழில் நுட்ப அனுபவமின்மையால், எனது தேவைகளைத் தாமதமாகவே செய்ய முடிகிறது.

மொழிப்பட்டையில் இன்னும் சில நாட்டுகொடிகளை இணைக்க நினைக்கிறேன். ஆட்சிமொழியாக அங்கீகரித்த நாட்டுக் கொடிகளை இணைக்கலாமா? (த*உழவன் 06:30, 16 ஜூன் 2010 (UTC))

வேண்டாம் என நினைக்கின்றேன். 2-3 கொடிகள் அல்லது அதிக அளவாக 4 கொடிகள் இருந்தால் போதுமானது. மொழியைச் சுட்டுவதற்குத்தானே ஒழிய ஆட்சிமொழிகளாக உள்ள எல்லா நாடுகளையும் குறிக்க அல்லவே கொடி. ஆங்கில மொழிப் பகுப்பு என்னும் பக்கத்தில் அரச ஏற்புபெற்ற மொழியாக உள்ள எல்லா நாட்டுக் கொடிகளையும் இடலாம் (வேண்டுமெனில்) (ஆனால் மொழிப் பட்டையில் வேண்டாம்). சில மொழி விக்சனரிகளில் ஐக்கிய இராச்சியக் கொடி மட்டுமே காட்டியுள்ளனர் (அமெரிக்கா, கனடா முதலானவை காட்டப்படவில்லை). --செல்வா 11:29, 17 ஜூன் 2010 (UTC)
  • இந்தியக்கொடி இடப்படுகிறது.அமெரிக்க கொடி, அடுத்துவரும் ஒலி வார்ப்புருவில் வருவதால் இங்கு இருமுறை வருவதால் நீக்கம்--த*உழவன் 19:53, 11 செப்டெம்பர் 2010 (UTC).Reply
  • இது பொருத்தமான காரணம் இல்லை. ஒரே கொடி என்றால் ஐக்கிய இராச்சியம் மட்டும். இரண்டு கொடிகள் என்றால் ஐ.இ + அமெரிக்கக் கொடி. மூன்று எனில் கனடா. 4,5,6 எனில் முறையே ஆத்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா. வெறும் எண்ணிகையில் மட்டும் அல்ல. அந்நாடுகளில் பேசுவோரின் பெரும்பான்மையையும் பார்க்க வேண்டும். இந்தியா எனில், ஆங்க்காங் என்றும் தென் ஆப்பிரிக்கா என்று அளவற்று நீண்டு கொண்டே போகும். ஆங்கிலம் பேசும் நாடுகளின் உலகப்படமும் இட்டு ஒரு வார்ப்புரு முன்னர் இட்டிருந்தேன். ஒலிப்பில் ஒரு நாட்டின் கொடி மீண்டும் வருவதால் தவறில்லை. ஐ.இ மட்டும் இட்டாலும், ஐ.இ ஒலிப்பைக் குறிக்க என்ன செய்வீர்கள்? இப்படியே மாற்றிக்கோண்டே போனால் முடிவேதும் இராது! --செல்வா 20:11, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:%3Dஆங்%3D&oldid=791622" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "=ஆங்=" page.