வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010

(வார்ப்புரு பேச்சு:செந்தமிழ் மாநாடு-2010 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காண்க:பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்

  • உங்களது பங்களிப்புகள் மாற்றத்திற்கு உள்ளாகலாம். அதனை கருத்தில்கொண்டு பங்களிக்கவும் என்பது பொதுவான விக்கி கொள்கை. அதனடிப்படையில் பார்க்கும் போது ஒவ்வொரு சொல்லிலும் இந்த வார்ப்புருவை இடுவது தேவையற்றது. தஇப தந்துள்ள சொற்கள் மாற்றத்திற்கு கூட உள்ளாகலாமில்லையா?. அதனால் தமிழக அரசை நன்றியுடன் சில இடங்களில் குறிப்பிட்டால் போதுமானது என்பது எனது கருத்து. -- Mahir78 12:06, 23 ஆகஸ்ட் 2010 (UTC)
    • சொற்களின் பக்கங்கள் பல கோணங்களில் மாற்றம் அடையும்தான், எனினும், முதல் படிவம்,முதலுரு தமிழக அரசால் தந்தது என இடலாம். அல்லது அந்தப் பகுப்பின் பக்கத்தில் விரிவாக எழுதி வைக்கலாம். விக்சனரியின் முகப்பிலோ, பிற முக்கியமானபகுதியிலோ குறித்தும் வைக்கலாம். ஒவ்வொரு பக்கத்திலும் இருக்க வேண்டியது (த.இ.ப) பகுப்பு மட்டுமே. ஒரு பொத்தான் (icon) போன்ற ஒன்றை வேண்டுமானால் இடலாம், அதனைச் சொடுக்கினால் இச்சொற்களுக்கான முதலுரு த.இ.ப தந்தது என குறிப்பிடலாம். இந்த குறிப்புகளும் கூட ஏன் தர வேண்டும் என்றால், இக்கொடையானது கணிசமானது, இதற்காக உழைத்து அச்சொற்களை ஆக்கியவர்களை நன்றிகூறும் முகமாகவும் இருத்தல் வேண்டும். இதனை தொலைநோக்குடனும், நல்லுணர்வோடும் நல்கிய அரசையும், த.இ.ப ஆட்சியர்களையும் கட்டாயம் நன்றியுடன் குறித்து வைத்தலுடன், அது வரலாற்றுக் கடமையும் ஆகும். --செல்வா 13:44, 23 ஆகஸ்ட் 2010 (UTC)
      • தஇப தந்துள்ள சொற்கள் மாற்றம் அடையும். அச்சொற்கள் அனைத்தும் மிகப் பொருத்துமானவை என்று கருத இயலாது.இப்பொழுதுள்ள மருத்துவச் சொற்களில், உரிய மாற்றங்களை மரு.செந்தி செய்கிறார்.
அது போல பிற சொற்களும் மாற வாய்ப்புண்டு. மாறமலும், வேறொரு சொல்லும் சேர வாய்ப்புண்டு. வேறுபாடுகளை அறியவும், தற்போது தமிழக அரசுக்கு நன்றி கூறுவதற்காகவும் கீழ்காணுமாறு அமைக்கலாமா? காண்க. dado
இப்பொழுதே இவ்வார்ப்புருவினை இணைப்பதற்குக் காரணம், மீண்டும் ஒரு முறை அனைத்துச் சொற்களையும் திறந்து இதற்குரிய மாற்றங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவே. ஏதேனும் மாற்றங்கள் அல்லது இணைப்புகள் இந்த வார்ப்புருவில் செய்தால் மட்டும் போதும். அது அனைத்துச்சொற்களிலும் மாற்றங்கள் தெரிய வழிவகுக்கும் அல்லவா?
த.இ.ப. சொற்களில் உரிய இணைப்பு இருப்பவை இப்பகுப்பில் பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் உள்ளன. உரிய புற இணைப்பு இல்லாதவைகளுக்கு இதனை இட்டால் நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன். நாம் பதிவேற்ற இருக்கும் சொற்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் த.இ.ப. இணைய இணைப்பைக் கொடுக்க இயலாது. ஏனெனில், அச்சொற்கள் அங்கு இல்லை. அவ்விணைய தளமும் ஒருங்குறிக்கு மாற உள்ளது. --த*உழவன் 06:20, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
    • த. இ. ப.வின் அனைத்துச் சொற்களிலும் ஓர் ஆதாரமாக இதை இடலாம். சொற்கள் மாறலாம்; மேலும் பொருட்கள் சேர்க்கப்படலாம்; த.இ.ப. வின் பொருள் பின்னால் இன்னும் சிறந்த ஒன்றுக்கு மாற்றப்படலாம் எனினும் மூல ஆதாரங்களில் ஒன்றாக இப்படி ஒன்று இருப்பதே சிறந்தது. பழ.கந்தசாமி 07:34, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
முதல் அடிச்சான்றாக இப்படி இருப்பது எனக்கும் உடன்பாடே, ஆனால் "செந்தமிழ் மாநாடு-2010" என்று இருக்கவேண்டுமா அல்லது த.இ.ப என்று இருக்கவேண்டுமா? இப்பொழுது த.இ.ப-வின் பெயர் மாறியிருந்தாலும், நமக்குக் கொடையாக அளித்த நிறுவனம், அவர்கள் ஆட்சிக்குழுவில் முறைப்படி ஒப்புதல் பெற்று அளித்தது அந்நிறுவனமே, ஆகவே நிறுவனத்தின் பெயரைத் தருவது சரியாக இருக்கும். செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடலாம். இது தானியங்கியாய் நடைபெறவிருப்பதால் இடர் இல்லை; மற்றொன்று, இச்சொற்கள் பின்னர் மாற்றப்பட்டாலும், அவர்கள் வழங்கிய சொற்களை முதலில் வழங்கியவாறே தருவது முறையாக இருக்கும். மேலும் தமிழ்ச்சொற்களுக்கும் ஈடான ஆங்கிலச்சொல்லையும் இணைத்துப் பக்கங்களை ஆக்க வேண்டுவது நல்லது. இவற்றில் பல பின்னர் மாற்றப்படலாம், நீக்கப்படலாம். என்றாலும், இவற்றை ஒரு பகுப்புக்குள் வைத்து இருந்தால், நாம் காலப்போக்கில் பார்த்து திருத்தியோ, கழித்தோ செம்மைப்படுத்தலாம். இவை பொறுமையாக பின்னர் செய்ய வேண்டிய பெரும் பணிதான். தானியங்கியாய்த் தமிழ்ச்சொல்லுக்கு அந்தந்த ஆங்கிலச்சொல்லை உருவாக்குவது எளிது. தேவை எனில் பின்னர் நீக்குவதும் எளிது, திருத்துவதும் எளிது. --செல்வா 12:15, 24 ஆகஸ்ட் 2010 (UTC)(எ.பிழை தி. --செல்வா 23:57, 24 ஆகஸ்ட் 2010 (UTC))

மூலம் நல்ல யோசனை. அதனை கொடுக்கும்போது, தமிழிணைய மாநாடு 2010 ல் தமிழ் இணைய பல்கலைக்கழகத்தால் தமிழ் விக்சனரிக்கு கையளிக்கப்பட்ட பட்டியல் என்றிருப்பதே சரியானது. செம்மொழி மாநாடு என்பது சரியல்ல. அத்துடன் த.இ.ப. ஆல் 2010ல் தமிழ் விக்சனரிக்கு கொடையளிக்கப்பட்ட பட்டியல் (போன்ற) ஒன்றையும் பகுப்பாக இணைத்துவிடலாம்.-- Mahir78 16:53, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

செய்யலாம்.--செல்வா 23:57, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
  • தமிழிணைய மாநாடு 2010 என்று சுருக்கமாக இங்கும், அவற்றின் பகுப்புரையில் விரிவாகவும் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும், முன்பு <.ref> பற்றி வினவியது போல, ஒரே ஒரு முறை மட்டும், 1 என்பது வர என்ன செய்யவேண்டும்? வேறு சிறப்புகள் இருப்பின் மாற்றம் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.--த*உழவன் 04:52, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

எதிர்காலத்தில் பிற கொடைகள்

தொகு

தற்போது பதிவேறவுள்ள சொற்களுக்கு, தற்போது தமிழக அரசுக்கு நன்றி கூறுவதற்காகவும், கொடைச்சொல் என்பதனைக் குறிப்பதற்காகவும், எதிர்காலத்தில் பிற கொடைகள் அளிக்கப்பட்டாலும் அவற்றை அடையாளம் காண கீழ்காணுமாறு அமைக்கலாமா? இங்ஙனம் அமைத்தால், இங்குள்ள ஒன்று என்ற எண்ணைச் சொடுக்கினால் அது பற்றிய முழுவிவரம் வரும். இதுபோலவே, பிற கொடைகளை நம் விக்சனரி பெற்றால், அதனை 2,3.. என வரிசையாக அமைக்கலாம்.

பங்களிப்பாளர்கள் வழமை போல எக்குறிப்பும் இல்லாமல் மொழிபெயர்ப்பினைச் செய்யலாம். த.இ.ப. வின் சொல்லில் மாற்றம் தேவைப்படின், அதனை வழமைப் போல உரையாடற் பக்கத்தில் குறிப்பிட்டு மாற்றலாம். இப்பொழுது மரு.செந்தி செய்வது போல, நாமும் பின்பற்றினால் சிறப்பாகும்.

(எ. கா.) dado

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன். நன்றி.வணக்கம்--த*உழவன் 05:14, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

Return to "தமிழிணைய மாநாடு 2010" page.