வார்ப்புரு பேச்சு:பயன்பாடு

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

{:{பொருள்}} என்ற வார்ப்புருக்குரிய நிறம், மற்ற வார்ப்புருக்களுக்கு இல்லாது இருந்தால் , பொருளை காணும் வாய்ப்பு அதிகம். பல ஒரே நிறமானப் பட்டைகள் இருப்பின் அவற்றின் நோக்கத்தினைக் குறைப்பதாகும். அழகாக இருப்பதை விட, ஒரு பயனர் எதற்காக வந்தாரே, அதனை முதலில் தர வேண்டும் என்பதே எனது நோக்கம். பொருளை நன்கு தெரிந்து கொள்ளவேண்டிய தேவை இருப்பின், அவர் பயன்பாடு ({:{வரியமை}}) வார்ப்புருவினைக் காண்பார். மொழிபெயர்ப்பினையே பெரிதும் காண்பர் என்பதே எனது கருத்து--த*உழவன் 06:46, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

நிற வடிவமைப்பு நன்றே. வரியமை என்ற சொற் பயன்பாடு பற்றியதே எனது சிக்கல். அது பயன்பாடு என்று இருந்தாலே நன்று. இலக்கண பயன்பாடு என்றதன் கீழ் என்ன வரும். சில எ.கா தந்தால் நன்று. --Natkeeran 06:49, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  • பயன்பாடு என்றே மாற்றிக்கொள்ளலாம். இலக்கணப் பயன்பாடு என்பதில், ஒரு சொல்லினைப் பற்றிய இலக்கணக்குறிப்புகளைத்தரலாமென்றுநினைக்கிறேன். முன்பு பெயர்ச்சொல், வினைச்சொல் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பகுப்பு இருக்கும் போது, அது தேவையில்லை என்று ஒரு பயனர் கூறியதால் அதனை கைவிட்டேன். எனினும், சில நுணுக்கமான இலக்கணச்சொற்களை பயன்படுத்த பயன்படுத்தலாமென்று எண்ணுகிறேன்.
(எ. கா.) அரி உள்ளது போல. அச்சொல் அமைப்பிலும் மாற்றங்களை செய்ய வேண்டும். ஆனால் இலக்கணபயன்பாட்டின் நோக்கம் அதுவே.

நிறவடிவமைப்பு எனக்கும் பிடித்திருக்கிறது. ஒரே நிறங்கள் பல இடங்களில் இருக்கும் போது, நமது நோக்கம் சிதறடிப்பதாக நான் கருதுகிறேன்.--த*உழவன் 07:08, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

நற்கீரன், ஆம் வரியமை என்பதை விட, பயன்பாடு என்பது சரியானதாக இருக்கும். இலக்கணப் பயன்பாட்டில் விணையாலணையும் பெயர், தொழிற்பெயர், ஆகுபெயர் போன்று பற்பல இலக்கண விள்ளக்கங்கள் தர இயலும். கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. --செல்வா 13:29, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி. உங்கள் கருத்துக்கள் படியே செய்யலாம். நிறங்களை நான் தவறுதலாகவே முன்னர் மாற்றி இருந்தேன். --Natkeeran 16:09, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

பால் என்ற சொல்லில் பலதகவல்கள், தகவற்பெட்டிக்குள் இருப்பது சிறப்பாக இருக்கிறது. இது போல ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் (சிறுவேறுபாடுகளுடன்) இருந்தால் நன்றாக இருக்கும். அதிலுள்ள படி பயன்பாடு என்பதும், பொருளுக்குரிய பலதகவல்களை அளிப்பதால் தகவற் பெட்டி நிறமே இங்கும் தேர்ந்தெடுக்கப் பட்டது.த*உழவன் 16:33, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

இப்பொழுது மாற்றப்பட்டுள்ள சாம்பல் நிறம் அறுதியாய் பிடிக்கவில்லையே!! --செல்வா 17:12, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
  • அடிக்கடி வரும் சொற்கள், தேடிவந்த பொருள் தெளிவாகத் தெரியும் பொருட்டு நிறமாற்றம் செய்யப்படுகிறது.--த*உழவன் 13:22, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

இப்பொழுது இருக்கும் பச்சை நிறம் அழகாக இல்லாமலும், மற்ற பகுப்புகளுடன் இணக்கம் இல்லாததாகவும் உணர்கிறேன். மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள்? --செல்வா 05:21, 28 அக்டோபர் 2010 (UTC)Reply

செல்வா, எனக்கும் இம்மாற்றத்தில் உடன்பாடு இல்லை. (நிற) வடிவமைப்பு என்பது மிகவும் அகவயமானது. எனவே, இதில் யார் பார்வை சரி என்று சொல்ல முடியாது. ஆனால், இப்படி தடாலடியான மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என த. உழவனைக் கேட்டுக் கொள்கிறேன். --ரவி 08:46, 28 அக்டோபர் 2010 (UTC)Reply

இப்பொதுள்ளது டல்லாக காண்டிராஸ்ட் இல்லாது இருக்கிறது. கொஞசம் அழுத்தமான நிறம் ஏதேனும் கொடுத்தால் நன்றாக இருக்கும்--Sodabottle 08:56, 28 அக்டோபர் 2010 (UTC)Reply
சோடாபாட்டில் என் கருத்தும் இதுவே. ஏனோ தமிழ் எழுத்துகளை அச்சு எழுத்தில் எழுதி, நிறத்தையும் ஒரு மங்கலான ஒன்றாக இட்டால் மிகவும் தொய்வாக உள்ளது. நிறத்தின் தேர்வும் அழகாக இல்லை என் பார்வையில். பட்டையின் நிறங்களும் பட்டையில் உள்ள சொற்களின் எழுத்துகளின் நிறமும் சீராக இணக்கமாக இருப்பது தேவை என நினைக்கின்றேன். ஒன்று பச்சையாகவும். ஒன்று வெளிநீலமாகவும் (மங்கலாக வேறு) இருப்பது உவப்பாய் இல்லை.--செல்வா 01:21, 29 அக்டோபர் 2010 (UTC)Reply

{{சான்று}.}என்பதிலிருந்த நிறத்தைப் பயன்படுத்தினேன்.தடித்த கருநிறத்திற்க்கு மாற்றாக வேறு எந்நிறத்தைப் பயன்படுத்தலாம்? --த*உழவன் 05:44, 29 அக்டோபர் 2010 (UTC)Reply

இப்போதைக்கு முன்பு இருந்த நிலைக்கே மாற்றியுள்ளேன். நிறமாற்றம்வேண்டும் எனில் கலந்துரையாடுவோம். இப்பொழுது தனிசையாக (மாடுலராக) உள்ளதால் எளிதாக மாற்றங்கள் வேண்டின் செய்யலாம். உவப்பாக இல்லை எனில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அடிக்கடி மாற்றாமல், தேவைப்படின் கலந்துரையாடி மாற்றுவது நல்லது என்பது என் கருத்து.--செல்வா 05:20, 30 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "பயன்பாடு" page.