விக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 20

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 20
papillon (பெ)
ஒலிப்பு: பாப்பியோன் - பட்டாம்பூச்சி
படத்தின் இடப்புறம் கீழே காது இரண்டு உள்ள மரைகள், பிரான்சிய மொழியில் பாப்பியோன் என்னும் சொல்லால் குறிக்கப்பெறுவன

papillon (பிரெஞ்சு, ஆண்பால்)

  1. பட்டாம்பூச்சி
  2. மிகு திறமையாளர், பல திறம் கொண்டவர், அடிக்கடி புதிய கோணங்களில் (திறமை நோக்கில்) வளர்ந்துகொண்டிருப்பவர்.
  3. பட்டாம்பூச்சி போன்ற வடிவுடையதாகக் கருதப்படுவது, முடிச்சு, மரை
    1. இறக்கை இருப்பது போல உள்ள மரை (கையில் பிடித்து முறுக்கித் திருகுவதற்கு ஏற்றதாய் இருப்பது)
  4. நீச்சலில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் தூக்கி நீரைத் தள்ளி உந்தும் நீச்சல் வகை.
  5. மடித்து வைத்து இருக்கும் துண்டறிக்கை (இறக்கை போல பிரித்துப் படிப்பது)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக