விசித்திரம்
விசித்திரம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- surprise, wonder - அதிசயம்.
- something peculiar, novel, strange, queer ; peculiarity, novelty, queerness - வழக்கத்திற்கு மாறானது; புதிரானது; வினோதம்
- anything diversely coloured or curiously wrought - விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடை யது.
- that which is diverse - பலதிறப்பட்டது.
- great beauty, loveliness - பேரழகு
- show, pomp - வேடிக்கை
- workmanship of an artisan - கம்மத்தொழில்.
- self-conceit; arrogance - இறுமாப்பு
- greatness - மேன்மை
விளக்கம்
பயன்பாடு
- இவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளது. வழக்கமாக எல்லோரும் முன்னால் நடந்துபோவார்கள். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் இவர் பின்னாலேயே நடந்து வருகிறார். - He has a strange habit. Everybody walks forward, but since 1991, he only walks backward.
- என்ன விசித்திரம் பாருங்கள்! செய்கிறது திருட்டுத் தொழில்! அதிலே தான தர்மம் செய்து 'தர்மப் பிரபு' என்ற பட்டம் (காதறாக் கள்ளன், கல்கி)
- எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள் (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- இறைவனின் படைப்பில் நீ மட்டும் விசித்திரம் விழிகள் அறிந்த காதலை உதடுகள் மறைக்க (வைரமுத்து)
- முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று (பாடல்)
- இவை யென்ன விசித்திரமே (திவ். திருவாய். 7, 8, 2).
- விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் (திவ். இயற். பெரிய. ம. 30)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விசித்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +