விஷ்ணு
(பெ)
விஷ்ணு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்- Vishnu A Hindu God for protection)
விளக்கம்
- கண்ணன், கார்மேக வண்ணன், நீலநிறவண்ணன் என்று வர்ணிக்கப்படுகிறார். எங்கும் நிறைந்து பரந்து விரிந்திருப்பதற்குத் தோற்றத்தளவில் நீலநிறம் வருவது இயல்பு. அது அறிவியல் தொடர்புடையதும்கூட. மலை, கடல், வெட்டவெளி போன்றவற்றில் தென்படுகின்ற இயற்கை போன்று, தென்படாத பரம புருஷன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதுதான் கிருஷ்ணனின் நிறத்துக்கான தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு "சர்வ வியாபி... (எங்கும் நீக்கமற நிறைந்தவன்') என்று பொருள். (கண்ணன் பிறந்தான், தினமணி, 19 Aug 2011) விண் என்றால் காணும் இடமெல்லாம் பரந்துவிரிந்த எல்லைகளற்ற நீல நிற ஆகாயம் என்பதாகும். அதைப்போன்றே எங்கும் நீக்கமற நிறைந்து நீல நிறம் கொண்டவராதலால் 'விண்ணு' எனப்பட்டு 'விஷ்ணு' ஆனார். ஆதி பகவனின் மூன்று தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் காத்தல் என்னும் செய்கைக்கு அதிபதியானவர்.