வீணை
தமிழ்
தொகு[[|thumb|px||வீணை:
வீணை மீட்டும் வங்கப்பெண்]]
பொருள்
வீணை (பெ) - நரம்பு/கம்பி இசைக்கருவி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - an Indian classical string instrument, veena
- The Indian lute
- இந்தி - वीणा
விளக்கம்
பயன்பாடு - அவள் வீணை வாசிப்பு நன்றாக இருந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
- எம்மிறை நல்வீணை வாசிக்குமே (தேவாரம் 1199, 7)
- மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே (திருநாவுக்கரசர். தேவாரம், 5.90.1)
- நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ!(மகாகவி பாரதியார்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +