పెద్ద పులి
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- விலங்கியல் பெயர்:Panthera tigris
పెద్ద పులి
- தெலுங்கு ஒலிப்பு...பெ1-த்3- த3- பு1-லி
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- tiger
- இந்தி
விளக்கம்
தொகு- புலி இந்தியாவின் தேசிய விலங்கு ....வங்க தேசம், வியத்னாம், மலேசியா, தென் கொரியா நாடுகளின் தேசிய விலங்கும் இதுவே....இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா எனப் பரவியிருந்து, தற்சமயம் வெகுவாகக் குறைந்துவிட்டன...இவைகளின் வாழ்விடங்களை மனிதனின் தேவைக்காக அழித்தல், மற்றும் இதன் தோல், பற்கள், நகங்கள் போன்ற உடற்பகுதிகளுக்காகவும், பரம்பரை சீன மருத்துவத்திற்காகவும் பெருமளவு புலிகளை வேட்டையாடல், வீரவிளையாட்டு என்று வேட்டையாடிக் கொல்லல் ஆகிய காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது...இதன் இறைச்சியை உண்போரும் உள்ளனர்...தற்போது புலியினம் முற்றிலுமாக அழியும் ஆபத்திலிருப்பதாக பிரகடனப்படுத்தப்பட்டு இவற்றை காப்பாற்றும் முயற்சியில் பல உலக நாடுகளும், அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன...உலக அளவில் மீந்திருக்கும் புலிகளின் இயற்கையான வாழ்விடங்களைக் காக்கவும், புலிகளை முழு அழிவிலிருந்து காப்பாற்றும் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தி ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி புலிகளைக் காக்கும் முயற்சிகளுக்கு ஆதரவுத் தேடவும், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 29-ம் நாள் அனைத்துலக புலிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது...