ஆங்கிலம்

தொகு
 
கடத்தாக் கதவ மிவிதி(IGFET) நுண்கருவியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். உமிழ்வாய் (Source), வடிதிரட்டி (Drain) ஆகிய இரண்டுக்கும் நடுவே நடக்கும் மின்னோட்டத்தைக் கதவம் (Gate) என்னும் மின்முனை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் நிறத்தில் உமிழ்வாய்-வடிதிரட்டி ஆகியவற்றுக்கு இடையே காட்டப்பட்டுள்ள மென்படலம் மின்கடத்தாப் பொருளால் ஆன கதவம் (ஆக்சைடால் ஆன கதவம்).

ஒலிப்பு::இக்3வெ2ட்6

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்

IGFET (பெ)

  1. பொறியியல்: மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் (கடதாக் கதவ மிவிதி). இது மின்புலத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு குறைக்கடத்திக் கருவி. ஒரு வகையான திரிதடையம்
விளக்கம்

இரு மின் முனைகளுக்கு இடையே நிகழும் மின்னோட்டத்தை மூன்றாவது முனையில் இருந்து தரும் மின்புலத்தால் கட்டுப்படுத்தும் ஒரு குறைக்கடத்தி நுண்கருவி. இது ஒருவகைத் திரிதடையம் (Transistor). இது ஒரு சுருக்கெழுத்துப் பெயர் (அஃகப்பெயர்). இதன் விரிவு Insulated Gate Field Effect Transistor என்பதாகும். குறிப்பலைகளை மிகைப்படுத்தும் மிகைப்பிகளிலும் (amplifiers), கணினிகளை இயக்கும் நுண்கருவிகளில் மின்னோட்டம் நடக்கும்- நடக்காது என இரட்டை நிலை (உண்டு-இல்லை) இயக்கமாகிய தொடுக்கியாகவும் (சுவிட்சு, switch) பயன்படுகின்றது. இரு முனைகளுக்கு இடையே நிகழும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் மூன்றாவது மின்முனை மின்கடத்தாப் பொருளால் (வன்கடத்தியால்)ஆன மென் படலமாகிய கதவம் (gate)எனப்படும் பகுதிக்கு மேலே இருந்து மின்புலம் பாய்ச்சி, கட்டுப்படுத்தும். இதன் மற்றொரு பெயர் MOSFET (metal oxide semiconductor field effect transistor.)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=IGFET&oldid=1867078" இலிருந்து மீள்விக்கப்பட்டது