evangelist:
நான்கு நற்செய்தியாளர்கள்:(இடமிருந்து வலம்):லூக்கா, மாற்கு, யோவான், மத்தேயு. ஓவியர்:ஆபிரகாம் ப்ளூமெர்ட் (1591-1651), ஓலாந்து.

ஆங்கிலம்

தொகு
பொருள்

evangelist()

  1. (கிறித்தவ வழக்கில்) நற்செய்திநூல் ஆசிரியர்; நற்செய்தியாளர்; நற்பறைஞர்
  2. (பழைய வழக்கு) சுவிசேஷகர்; சுவிசேடகர்
  3. கிறித்தவ மறைபரப்பாளர்; சமயப் போதகர்; அருள்பறைஞர்; அருள்மறை பறைஞர்
  4. (உருவகப் பொருளில்) ஒரு கொள்கை/கோட்பாடு/துறை/கருத்தியல் தொடர்பான ஆர்வப்பரப்புநர்; ஆர்வப் பரவுனர்; ஆர்வப் பறைஞர்;
விளக்கம்
  1. இயேசு கிறித்து என்பவர் மனிதருக்குக் கடவுளிடமிருந்து ஒரு நல்ல செய்தியைக் கொணர்ந்தார் என கிறித்தவர் நம்புகின்றனர். உலக மக்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு நிறைவான பேரின்ப வாழ்வை வழங்கிட அவர் சிலுவையில் உயிர்துறந்து, உயிர்த்தெழுந்தார். இந்த நற்செய்தியை எடுத்துரைக்க மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் நற்செய்திநூல்களை கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதினர். எனவே அவர்கள் நற்செய்திநூல் ஆசிரியர்/நற்செய்தியாளர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
பயன்பாடு
  1. கடவுளின் மகனாகிய இயேசு கிறித்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் மாற்கு 1:1 திருவிவிலியம்
  2. இயேசு சீடர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்றார் மாற்கு 16:15 திருவிவிலியம்
  3. technology evangelist - நுட்பியல் ஆர்வப்பரப்புநர்; நுட்பியல் பறைஞர்; நுட்பறைஞர்; நுட்பப் பரவுநர் (குறிப்பிட்டதொழில்நுட்பத்தைப் பற்றி எடுத்துரைத்து அதைப் பயன்படுத்துமாறு மற்றவர்களைத் தீவிரமாக ஊக்குவிப்பவர்)
  4. technology evangelist for Web services - Web Services நுட்பியல் பறைஞர்
  5. He's also a tireless evangelist for videoblogging, doing talks, seminars, workshops, and online community building nonstop - அவர் ஓய்வற்ற பேச்சுகள், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை, இணையச் சமூகம் அமைத்தல் முதலியவற்றின் மூலம் ஒளிவலைப்பதிவு நுட்பப் பரவுநர் (Videoblogging for Dummies, Stephanie Cottrell Bryant)
  1. Evangelist என்னும் சொல்லின் மூலம் கிரேக்கம் ஆகும். அம்மொழியில் εὐάγγελος (euangelos)என்றால் நல்ல செய்தி கொணர்கின்ற என்பது பொருள். ευ- (eu) என்னும் பகுதி நல்ல, சிறந்த எனவும், ἀγγέλειν (angelein) என்னும் வினைச்சொல் அறிவித்தல் எனவும் பொருள்படும்.
  2. 1730களிலே ஐக்கிய இராச்சியத்தில் உருவானகிறித்தவ மதமுறை ஆகும்.(Evangelicalism-ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்)
( மொழிகள் )

சான்றுகோள் ---evangelist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=evangelist&oldid=1862457" இலிருந்து மீள்விக்கப்பட்டது