1. ஆங்.| இணைப்.| conj.

  • இதுவுமதுவும் அல்லாத; இரண்டுமற்ற; இரண்டும் இல்லாததாக. [Neither West Indies nor England got to the quarter finals of ODI Cricket World Cup in 2023. = மேற்கிந்தியத் தீவுகளும் சரி இங்கிலாந்தும் சரி இருவருமே 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிக்குத் தகுதி பெறவில்லை.]

2. ஆங்.| சுட்.பெ.| pro.

  • (குறிப்பிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றுள்) ஒன்றாலும்/ ஒருவராலும் இயலாத நிலை. [I asked two people the way to the station but neither of them could help me. = இரயிலடிக்கான வழியை நான் இருவரிடம் கேட்டேன், ஒருவராலும் எனக்கு உதவ இயலவில்லை.]

3. ஆங்.| உரி.| adj.

  • (அவற்றில்) ஒன்றுமே [I have two TVs but neither one works. = என்னிடம் இரு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தாலும் அவற்றில் ஒன்றுமே வேலை செய்யவில்லை.]
பலுக்கல்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் neither
"https://ta.wiktionary.org/w/index.php?title=neither&oldid=1994615" இலிருந்து மீள்விக்கப்பட்டது