சுட்டுப்பெயர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சுட்டுப்பெயர், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் demonstrative pronoun
விளக்கம்
ஒருமுறை பயன்படுத்திய பெயர்ச்சொல்லுக்கு மாற்றியாகப் பயன்படும் இன்னொரு சொல்லே சுட்டுப் பெயர் ஆகும். உ.ம்.: இந்தியா, இருபதாம் நூற்றாண்டில் ஒரு தனிப்பெரும் ஆற்றல் மிக்க நாடாக வளர்ந்துள்ளது. அது ஆசியாவின் ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பும் ஆகும்.- இந்த இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் இந்தியா என்ற பெயர்ச்சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. இரண்டாவது வாக்கியத்தில் 'அது' என்ற சொல் இந்தியா என்ற சொல்லிற்கு ஒரு மாற்றுச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஒரு பெயர்ச்சொல்லுக்கு மாற்றுச்சொல்லாக வருவதுதான் சுட்டுப்பெயர் ஆகும்.
பயன்பாடு
சுட்டுப்பெயர் என்பது தமிழ் இலக்கணப் பதமாகும்.