இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

new historicism (பெ)

  1. புதுவரலாற்றுவாதம் - வரலாற்றை ஒரு புனைவு என்று அவர்களும் ஏற்றுக் கொண்டு அப்புனைவுக்குள் நாம் பொதுவான போக்குகளையும் சாராம்சமான கருத்துகக்ளையும் தேடும் நோக்கு.எல்லா இலக்கியப் படைப்புகளும் வரலாறு என்ற அந்த பெரிய புனைவுக்குள் நிகழக்கூடிய புனைவுகளேயாகும். இந்தப் புனைவுகள் சேர்ந்துதான் வரலாறாக ஆகின்றன. இவற்றின் மூலமே வரலாறு என்னும் புனைவு வளர்கிறது . ஆகவே இலக்கியப் படைப்புகளை ஒரு தனித்த வடிவமாகக் கண்டு அவற்றின் உட்கூறுக¨ளையும் அவற்றின் தொடர்புமுறைகளையும் மட்டும் ஆராயும் மொழியியல் அணுகுமுறைகள் பொருந்துவன அல்ல என வாதிடும் இத்தரப்பினர் இலக்கியப் படைப்புகளை அவை முளைத்தெழுந்து காலூன்றி நிற்கக்கூடிய வரலாற்றில் வைத்து அணுகினால் மட்டுமே அதற்குப் பொருள் இருக்கும் என்கிறார்கள். 1980களில் ஸ்டீபன் கிரீன்பிளாட், ஜெரோம் மெக்கான், மெர்ஜோரி லெவின்சன்,மெரிலின் பட்லர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கோட்பாடு.
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---new historicism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. கலைச்சொற்கள்
  2. Encyclopedia Tamil Criticism

 :historic - history - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=new_historicism&oldid=1978159" இலிருந்து மீள்விக்கப்பட்டது