pyrrhic victory
பொருள்
pyrrhic victory(பெ)
- w:பிர்ரிய வெற்றி; பெருவிலை கொடுத்து அல்லது பேரிழப்பில் கிடைத்த வெற்றி
விளக்கம்
- போரில் வெற்றி அடைவதற்கு பெரும் இழப்புகளோ பெரும் காலதாமதமோ ஏற்பட்டால் அது பிர்ரிய வெற்றி எனப்படுகிறது. அது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில், அதுவே தோல்வியடையப் (இழப்புகளால்) போதுமானது என்னும் அளவுக்கு வெற்றி பெறும் தரப்புக்கு இழப்புகள் உண்டாகும். கிமு 276ல் உரோமக் குடியரசுடன் ஏற்பட்ட சண்டையின் போது எபிரசின் மன்னன் பிர்ரசு வெற்றி பெற்றார். ஆனால் அச்சண்டையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்து நொந்து போய் “இப்படி இன்னொரு வெற்றி கிடைத்தால், என் கதி அதோகதிதான்” என்று சொன்னதாக ரோம வரலாற்றாளர் புளூட்டார்க் குறிப்பிடுகிறார். காலப்போக்கில் இத்தகு வெற்றிகள் “பிர்ரிய வெற்றி”கள் என்று அழைக்கப்படலாயினர். போரியலில் மட்டுமின்றி வர்த்தகம், அரசியல், விளையாட்டு, சட்டம் போன்ற துறைகளிலும் இப்பயன்பாடு உள்ளது.
பயன்பாடு
(#)