stoicism
- உறுதிப்பாட்டுவாதம்; இயல்நெறியியம்[1]; கடுந்தன்னடக்கவியம்[2]; நிலையேற்புக் கொள்கை[3]; இன்பதுன்ப நடுநிலையியம்[4];
- விருப்பு வெறுப்பற்ற நிலை[5]
ஒலிப்பு
விளக்கம்
- புறச்சூழல்கள் அளிக்கும் பாதிப்பே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மையப் பெரும் சக்தி என்றும் ஆகவே புறச்சூழல்களை தனித்துவத்துடனும் கொள்கையுறுதியுடனும் எதிர்கொள்வதே மேலான வாழ்வுக்கு வழி என்றும் வாதிட்ட கிரேக்க தத்துவக்கொள்கை. புறச்சூழல் நம்மை அடித்துச் சென்றுவிடாதபடி விலகி நமது தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக தைரியம் நடைமுறை விவேகம், நீதியுணர்வு போன்றவற்றைக் கடைபிடிப்பது, துயரங்களைத் திடமாக எதிர்கொள்வது. (ஒருமையும் உறுதியும், ஜெயமோகன்)
- பெரும்பாலான சாகஸ நாவல்களில் இந்த (உறுதிப்பாட்டுவாத) மனநிலை வெளிப்படுவது உண்டு. வாழ்வின் பிற அம்சங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வாழ்வின் புறவய சக்திகளில் சவால்களைத் திடமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் இம்மனநிலையை பிரதிநிதித்துவம் செய்பவை. எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ இதற்கு மிகச் சிறந்த உதாரணம் (ஒருமையும் உறுதியும், ஜெயமோகன்)
பயன்பாடு
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2010). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 12 – மெய்யியல்.
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2010). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 12 – மெய்யியல்.
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2010). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 12 – அரசியல்.
- ↑ அருளி, ப. (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2010). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 8 – மனையியல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stoicism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *