பொருள்
  • war of attrition, பெயர்ச்சொல்.
  1. அரைப்பழிவுப் போர்
விளக்கம்
  1. போரில் இரு தரப்புகள் மோதும் போது, எளிதில் யாருக்கும் வெற்றி கிட்டவில்லையெனில் அப்போர் அரைப்பழிவுப் போராக மாற வாய்ப்புண்டு. களத்தில் சமமான பலமுடைய இரு தரப்புகளும் நெடுங்காலம் தெளிவான வெற்றியில்லாமல் மோதிக்கொள்வர். இம்மோதல்களில் ஏற்படும் இழப்புகளை எத்தரப்பினால் எளிதில் ஈடு செய்ய முடிகிறதோ அத்தரப்பே இறுதியில் வெற்றி பெறும். attrition என்பது உராய்ந்து அழித்தல்/மெல்ல அழித்தல் என்று பொருள் படும். இத்தகு போர் முறையில் ஆள்பலம், தொழில் வளம் மிக்க நாடுகளே வெற்றி பெரும். உத்தித் திறமை, வீரம் போன்றவை இதில் பலன் தரா.
பயன்பாடு
  1. In a war of attrition, the side with the largest resources and manufacturing capacity wins
( மொழிகள் )

ஆதாரங்கள் ---war of attrition--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=war_of_attrition&oldid=1836933" இலிருந்து மீள்விக்கப்பட்டது