- அத்தா (ATTHA , ATTAH means FATHER, DADDY ) என்பது பழந்தமிழ்ச் சொல்.தமிழ் இசுலாமியர்களில் இராவுத்தர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்...அத்தா என்பது தூய தமிழ் மொழியில் தந்தை என்று அழைக்கப்படுகிறது... அத்தன் என்றால் தகப்பன் என்று தமிழில் பொருள். பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்... அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்...
- தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர்கள் தங்களின் தந்தையை அத்தா என்றே அழைக்கின்றார்கள்.
- ஒருவரை மரியாதையாக அழைப்பதற்கு “வாங்கத்தா” வாங்க! அத்தா! என்ற வார்த்தையை கொண்டே அழைப்பது முஸ்லிம் கிராமங்களில் இன்றளவும் வழக்கமாக உள்ளது.
- அத்தா என்று தந்தையை அழைக்கும் முறை தமிழ் நாட்டைத் தாண்டி மலேசியா, சிங்கப்பூர் வாழும் தமிழ் முஸ்லிம்களியிடம் வழக்கமாக உள்ளது.
- "அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
- "அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்
- ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற - சிவ புராணம்