அல்வா கொடுத்தல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • அல்வா கொடுத்தல், வினைச்சொல்.
  1. ஏமாற்றுதல்
  2. மோசம் செய்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to cheat
  2. to practice fraud or trickery

விளக்கம்

தொகு
  • இது ஒரு பேச்சு/கொச்சை வழக்கு...ஒரு வேலை அல்லது பொறுப்பை ஏற்றுக்கொண்டப்பிறகு அதை அடியோடு செய்யாமல் இருத்தல்/கொஞ்சம் செய்துவிட்டு முடிக்காமல் விட்டுவிடுதல்/செய்து முடிப்பேனென உறுதியளித்துவிட்டு சும்மாயிருத்தல்/அரைகுறைத் தகவல்களைத்தந்து இலக்கை எட்டிவிட்டதாக நம்ப வைத்தல் ஆகிய செயல்களெல்லாமே அல்வா கொடுத்தல் என்னும் சொல்லாடலில் அடங்கும்...இக்காரியங்களெல்லாம் ஒப்புக்கொண்ட நிலையிலிருந்து நழுவி, வழுக்குவதால் ஏற்படும் ஏமாற்றத்தைக் குறிப்பிடுமாதலால், வழுக்கி நழுவும் தன்மையுள்ள நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட தின்பண்டமான அல்வா வுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது எனலாம்!...அல்வாவின் இன்சுவையைப்போலவே முதலில் நம்பிக்கையளித்து, பின்னர் வாயிலிட்டவுடன், சுவைப்பதற்கு முன்பே வழுக்கித் தொண்டைக்குள் நழுவிவிட்டால் ஏமாற்றம்தானே?
"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்வா_கொடுத்தல்&oldid=1451096" இலிருந்து மீள்விக்கப்பட்டது