தமிழ் தொகு

பொருள் தொகு

  • அழித்தல், பெயர்ச்சொல்.
  1. சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
  2. செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை)
  3. கெடுத்தல்
  4. கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாய்ச்..)
  5. குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக சிந்தாமணி)
  6. உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்காப்பியம்பொ. உரை)
  7. மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர்(சிலப்பதிகாரம்)
  8. தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய..)
  9. நீக்குதல்(கலித்தொகை)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to destroy, exterminate
  2. to spend
  3. to ruin, damage
  4. to efface, obliterate
  5. to disarrange
  6. to change the form or mode of
  7. to cause to forget
  8. to smear
  9. to leave off bring to a close


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழித்தல்&oldid=1831912" இலிருந்து மீள்விக்கப்பட்டது