ஆர்
பொருள்
ஆர் (இ)
- ஆர் என்னும் பெயர்ச்சொல் ஆத்தி மரத்தைக் குறிக்கும்
- ஆர் என்னும் வினைச்சொல் நிறைதலைக் குறிக்கும்
- ஆர் என்னும் இடைச்சொல் இயற்பெயரோடு வரும் (தொல்காப்பியம் இடையியல் 22)
- ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலைக் கிளவியாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 23)
- ஆர் என்னும் உரிச்சொல் மிகுதியை உணர்த்தும்
விளக்கம்
பயன்பாடு
- போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல்காப்பியம் 3-63)
- வயிறார உண்டார்
- தொல்காப்பியனார் வந்தார், அரசனார் வந்தார், பார்ப்பார் வந்தார், (யானையார் வந்தார்)
- செல்லல் மன்னார் நெடுந்தகை (இளம்பூரணர் எடுத்துக்காட்டு) (மன் + ஆர்)
- ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதல் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை (முதுமொழிக்காஞ்சி 1)