உசாவு(வி)

பொருள்
  1. அறிவுரை பெறு; தக்கவர்களிடம் கேட்டு அறி;
  2. ஆராய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. consult , take counsel- தக்கவர்களிடம் கேட்டு அறி; ஆலோசனை/அறிவுரை பெறு; ஆலோசி; உயவு
  2. examine - ஆராய்
  3. question, enquire - கேள், விசாரி, வினவு
  4. converse, have hold social intercourse - அளவளாவு
பயன்பாடு
  1. ஆவணக் காப்பகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். தகவலைத் தேடினார், மாணவனாய்க் குறிப்பெடுத்தார். களைப்பின்றித் துருவித் துருவி உசாவினார். [1]
  2. "ஐயா பசியாறிட்டீங்களா?" என்று உசாவும் குரல் மலையகத் தமிழர் குரலாகத்தான் இருக்கும். (மொழிப் பயிற்சி 30: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 Mar 2011)
  3. உயர்நடுவர்கள் சான்றாயர் (ஜூரி) களைச் சரியாக நெறிப்படுத்தவில்லை. ஐயத்திற்கிடமான சான்றுரைஞர் (சாட்சிகள்) களையும், சான்றுகளையும் நேரிய முறையில் உசாவவும், மதிப்பிடவும் இல்லை. பாகவதருக்கும் கலைவாணருக்கும் எதிராகக் கொண்டுவரப் பெற்ற சான்றுரைஞர் அனைவரும் சொல்லிப் பயிற்சியளிக்கப் பெற்றவர். அவர்கட்கு எதிராக அளிக்கப்பெற்ற சான்றுகளும் அறிக்கை களும் நிரம்ப முரண்பாடுகள் உள்ளவையாக இருக் கின்றன. (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)

ஆதாரங்கள் ---உசாவு---சென்னைபேரகரமுதலி + வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=உசாவு&oldid=995560" இலிருந்து மீள்விக்கப்பட்டது