பொருள்

உரும்(பெ)

  1. அச்சம்
  2. இடி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. fear
  2. thunder
பயன்பாடு
  • உரும் -> உருமு = இடிக்கும் மேகம்
(இலக்கியப் பயன்பாடு)
  • உருமில் சுற்றமொடு இருந்தோற் குறுகி (பெரும்பாணாற்றுப்படை 447) (அச்சமில்லாத சுற்றத்தோடு)
  • உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு (புறநானூறு) (உரும்=இடி)
(இலக்கணப் பயன்பாடு)
  • "பேம் நாம் உரும் என வரும் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள" - தொல்காப்பியம் 2-8-68



( மொழிகள் )

சான்றுகள் ---உரும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரும்&oldid=1023083" இலிருந்து மீள்விக்கப்பட்டது