பொருள்

ஊர்சுற்றி, .

  1. நாடோடி
  2. வெட்டியாக அலைந்துகொண்டிருக்கும் நபர்.
  3. ஒரு நிலையான வசிப்பிடம் இன்றி ஊர் ஊராக அலைந்துகொண்டிருப்பவர்.
  4. கழுதை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a vagrant
  2. a wanderer, wanderlust
  3. a rover
  4. an ass or a donkey
விளக்கம்
  • ஒரு நிலையான வசிப்பிடமோ, நோக்கமோ இன்றி வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டு திரியும் மனிதனை 'ஊர்சுற்றி' என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. கழுதை தொடர்ந்து ஊரெங்கும் சுற்றிக்கொண்டு திரிவதால் கழுதைக்கும் இப்பெயர் ஏற்பட்டது. முன்பு, குழந்தைகளில் சரிவரப் படிக்காத குழந்தைகளையும் இப்பெயரைப் பயன்படுத்தித்தான் திட்டும் பழக்கம் இருந்தது. ஒரு இடத்திலிருந்து நேர் வழியாகச் செல்லாமல் பல இடங்களுக்குச் சென்று கடைசியில் சேருமிடம் சேரும் பேருந்தைக் கூட இப்படித்தான் அழைப்பர்.
பயன்பாடு
  • ராமு, சரிவர உழைப்பதில்லை; சம்பாதிப்பதுமில்லை- எந்த வேலையுமின்றி 'ஊர்சுற்றி' வருகின்றார்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஊர்சுற்றி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்சுற்றி&oldid=1906407" இலிருந்து மீள்விக்கப்பட்டது