எண்ணெய்ப் பழையது

தமிழ்

தொகு
 
எண்ணெய்ப் பழையது:
அரிசிச்சோறு--மீந்துபோனால் தண்ணீரில் ஊறவைத்து பழையது ஆக்கிவிடுவர்
 
எண்ணெய்ப் பழையது:
நல்லெண்ணெய்---பழையதோடு சேர்க்கப்பட்டு எண்ணெய்ப் பழையது எனும் உணவாகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எண்ணெய்ப் பழையது, பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+பழையது)
  1. ஓர் உணவு

விளக்கம்

தொகு
  • சில தசாப்தங்கள்வரை தமிழகத்தில் பழக்கத்திலிருந்து தற்போது ஏறக்குறைய மறைந்துவிட்ட ஓர் உணவுப்பழக்கம்...ஒரு குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்டபிறகு மீந்துப்போன அரிசிச்சோற்றை தண்ணீர்விட்டு அன்றைய இரவு முழுவதும் ஊறவைத்துவிடுவர்...மறுநாள் காலை இந்த அன்னம் பழையது எனப்படும்...இந்த சாதத்தை ஊறவைத்தத் தண்ணீரிலிருந்து பிழிந்து எடுத்து, வேண்டிய அளவு உப்புச் சேர்த்து, அதில் நல்லெண்ணெயை கொஞ்சம் கலந்து, நன்றாகப்பிசைந்து உண்பர்...தொட்டுக்கொள்ள வடுமாங்காய் அல்லது நார்த்தங்காய் ஊறுகாய்தான்...பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்களே இருந்துவந்தக் காலத்தில் காலையில் வீட்டின் சிறுவர் சிறுமியரையெல்லாம் வரிசையாக உட்காரவைத்து, வீட்டில் அம்மா அல்லது பாட்டி முறையிலுள்ள ஒரு பெண்மணி, அவர்களுக்கெல்லாம் இந்த எண்ணெய்ப் பழையதை பிசைந்து உண்ணக் கையில் தருவார்கள்...பெரியவர்களும் தின்ற இந்த உணவு உடலுக்கு மிகுந்த வலிமையையும், ஊட்டத்தையும் கொடுத்தது...அந்தக் காலத்து மல்லர்களும் இந்த உணவையே காலை வேளைகளில் சாப்பிட்டார்கள் என்பர்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A blended break-fast food made of old cooked rice and sesame oil



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்ப்_பழையது&oldid=1277963" இலிருந்து மீள்விக்கப்பட்டது