தமிழ்

தொகு
 
எள்ளுண்டை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எள் + உண்டை

பொருள்

தொகு
  • எள்ளுண்டை, பெயர்ச்சொல்.
  1. எள்ளுருண்டை
  2. எள்ளும் வெல்லமுங் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி
    (எ. கா.) இடியவலோடெள் ளுண்டை (பதினொ. கபி. மூத். 3)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. pastry balls made of sesame and jaggery

விளக்கம்

தொகு
  • சுத்தமான கறுப்பு எள்ளை, தண்ணீரில் ஊறவைத்து, நீர்வடித்து சற்று உலர்த்தி, எண்ணெய்விடாமல் சட்டியில் நன்கு வறுத்துக்கொண்டு, அதை வெல்லப்பாகிலிட்டுச் சிறிய உருண்டைகளாகப்பிடித்து பயன்படுத்துவதே எள்ளுண்டை அதாவது எள்ளினால் செய்யப்பட்ட உண்டை என்பதாகும்...உடற் எலும்புகளுக்கு, சிறப்பாகப் பெண்களுக்கு மிக நன்மை தரும் ஓர் இனிப்பான உணவுவகை...செய்யும் முறையில் மிகச்சிறு வேறுபாடுகளுமுண்டு...அந்தணர்கள் கொடுக்கும் முன்னோர்களின் திதிக்களில் இன்றியமையாத ஓர் உணவு...தோல் நீக்கிய வெள்ளை எள்ளினாலும், சர்க்கரைப் பாகிலிட்டும் செய்வதுண்டு என்றாலும், அந்த முறை ஆரோக்கியத்திற்கு அவ்வளவுச் சிறப்பானதல்ல...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எள்ளுண்டை&oldid=1410466" இலிருந்து மீள்விக்கப்பட்டது