ஐதர் காலத்து

(ஐதர் அலி காலத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

ஐதர் காலத்து, (உரிச்சொல்).

  1. மிகப் பழைய
  2. தற்காலத்துக்கு உதவாத
மொழிபெயர்ப்புகள்
  1. obsolete ஆங்கிலம்
விளக்கம்
  • ஹைதர் காலத்து /ஐதர் காலத்திய/ ஐதர் அலி காலத்திய என்ற பயன்பாட்டில் வரும் “ஐதர்” மைசூர் அரசின் படைத்தளபதியும் பின் ஆட்சியாளருமான ஐதர் அலி (கிபி 1720-1782) என்பவரைக் குறிக்கிறது. இவர் திப்பு சுல்தானின் தந்தை. மிகப்பழைய பொருட்கள், கருத்துக்கள் என தற்காலத்துக்கு உதவாதவை அனைத்தும் “ஐதர் காலத்து” என்று வர்ணிக்கப்படுகின்றன.
பயன்பாடு
  • ஐதர் காலத்து சட்டத்தை வைத்துக் கொண்டு இதில் சரியான முடிவுகளை எடுக்க அரசு மறுக்கிறது(தினமலர் செய்தி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஐதர் காலத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐதர்_காலத்து&oldid=1011817" இலிருந்து மீள்விக்கப்பட்டது