ஒப்புரவு
ஒப்புரவு (பெ)
பொருள்
- ஒற்றுமை; பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம்
- இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல்; ஒத்துப் போகும் மெல்லியல்பு
- முறைமை (ஒழுங்கு) கடைப்பிடித்தல்; உலகப் பொது ஒழுகலாறு (ஒழுக்க நடைமுறை)
- உலகநன்மை
- வேளாண்மை
- (கிறித்தவ வழக்கில்) பாவ மன்னிப்புப் பெற்று, கடவுளோடு நல்லுறவை மீண்டும் அடைய வழியாகும் திருவருட்சாதனம்
- (முந்தைய வழக்கு) பாவசங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- agreement; union; fitting manner of helping others
- conduct according to accepted norms
- (sacrament of) reconciliation
- (formerly) confession
விளக்கம்
- ஒப்பு, ஒத்து என்பன ஏறத்தாழ ஒரே பொருள் கொண்டவை. ஒற்றுமை என்பது ஒத்து ஒன்றாய் இருக்கும் தன்மை. உலகத்தோடு, உலக நல்லொழுக்கத்தோடு ஒன்றி இருக்கும் முறைமைக்கும் வழங்குகின்றது. ஒப்புரவாயிருத்தல் என்றால் நலமாய் இருத்தல் (இணக்கமான நல்லுறவில் இருத்தல்).
- (கிறித்தவ வழக்கில்) திருமுழுக்குப் பெற்றபின் ஒருவர் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, அவரைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கின்ற கிறித்தவ சமயச் சடங்கு 'ஒப்புரவு அருட்சாதனம்' என்று அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
- கடவுள் கிறித்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார் (2 கொரி 5:18)திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
- ஒப்புரவு ஒழுகு (ஆத்திசூடி)
- அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்ட - 983 (திருக்குறள்)
- புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற (குறள் 213)திருக்குறள் - "ஓருயிர்க்கே யுடம்பளித்தால் ஒப்புரவு இங்கென்னாகும்" (பெருந்தொ. 188)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒப்புரவு--- DDSA பதிப்பு + வின்சுலோ + +
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ்ச் சொற்பிறப்பிய அகரமுதலித் திட்டம், தரமணி, சென்னை 600 113.
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974