திருவருட்சாதனம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருவருட்சாதனம்(பெ)

கிறிஸ்தவத்தில் நடைமுறைப்படுத்தப்படும் புனித சடங்கு

(பிற சொல் முறைகள்):

  1. அருட்சாதனம் (அருள்சாதனம்)
  2. அருளடையாளம்
  3. தேவதிரவிய அனுமானம்
  4. சாக்ரமெந்து (போர்த்துகீசிய மொழியிலிருந்து - ஒழிந்த வழக்கு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • sacramentum என்பது இலத்தீன் வேரடிச்சொல். வாக்குறுதி, தூய்மையாக்கும் சமயச் சடங்கு என்பது மூலப்பொருள்.
  • திருவருட்சாதனங்கள் ஏழு:
  1. திருமுழுக்கு
  2. உறுதிப்பூசுதல்
  3. நற்கருணை
  4. ஒப்புரவு
  5. நோயில்பூசுதல்
  6. குருத்துவம்
  7. திருமணம்
  • இவற்றுள் திருமுழுக்கு, நற்கருணை ஆகிய இரண்டும் புராட்டஸ்டாண்டு சபையாராலும் திருவருட்சாதனங்களாக ஏற்கப்படுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவருட்சாதனம்&oldid=1064171" இலிருந்து மீள்விக்கப்பட்டது