பொருள்

(பெ) ஓதம்

  1. ஞானம்
  2. கடலின் நீர்மட்டத்தில் தோன்றும் ஏற்றத் தாழ்வு
    கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350
    பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
    போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு, மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர, ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்
    ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி

´குரைகடல் #ஓதம்# நித்திலம் கொழிக்கும் கோணமாமலையமர்ந்தாரே ‍- திருஞான சம்பந்தர் அருளிய கோணமலைப்பதிகம்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- wisdom
  • ஆங்கிலம்- tide
  • ஆங்கிலம்- orchitis
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதம்&oldid=1998441" இலிருந்து மீள்விக்கப்பட்டது