ஓம் நமோ நாராயணாய


பொருள்

ஓம் நமோ நாராயணாய (இ)

  • மந்திரம்
விளக்கம்
  • இங்குக் காட்டப்படுவது தமிழ்நெறி விளக்கம்
  • நார் ஆய் அணன் = நாரை ஆயும் அண்ணன் (ஆய் - வினைத்தொகை, மூன்று காலத்துக்கும் உரியது)
  • நாராயணாய (ம்) நாராயணாய எனத் திரும்பத்திரும்பச் சொல்லும்போது இடையில் ம் மறைந்து நிற்பது தமிழ் இலக்கணநெறி.
  • நாராயணனை நாரணன் எனல் ஆழ்வார் வழக்கம்
  • நாம் நாராய அண்ணனின் ஆயம் (ஆயத்தார்)
செய்வோம் என்றால் நான் செய்வேன், நீ செய், அவன் செய்யட்டும், மூவரும் செய்வோம் என்று பொருள்படுவதை அறிவோம்.
செய்+வ்+ஓம்=செய்வோம். இதில் ஓம் என்னும் இடைச்சொல் என்ன பொருள் தருகிறதோ அதுதான் ஓம் என்னும் தமிழ்மந்திரத்தின் பொருள்.
நார் என்பது அன்பு
பயன்பாடு
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் (திருக்குறள் 833)
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் (திருக்குறள் 958)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓம்_நமோ_நாராயணாய&oldid=994585" இலிருந்து மீள்விக்கப்பட்டது