வினைத்தொகை
வினைத்தொகை (பெ)
பொருள்
- பெயர்ச்சொற்களின் ஒரு வகை. இவ்வகையான பெயர்ச்சொல்லில் ஒரு பகுதியானது மூன்று காலத்துக்கும் பொருந்திவருமாறு வரும் வினைச்சொல் ஒன்று அடங்கிய பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு பெயர்ச்சொல்லில் ஒரு பகுதி மூன்று காலத்துக்கும் பொருந்திவருமாறு வரும் வினைச்சொல் அடங்கிய பெயர்ச்சொல். எடுத்துக்காட்டாக ஊறுகாய் என்பது ஊறின காய், ஊறுகின்ற காய், ஊறிய காய் என முக்காலத்துக்கும் பொருந்தி வருமாறு அமைந்த ஊறு என்னும் வினைச்சொல் அடங்கிய பெயர்ச்சொல்.
- விடுகதை, தொடர்கதை, பொங்குகவிதை, சுடுசோறு, குடிதண்ணீர், விரிகடல், வெடிகுண்டு, வளர்பிறை, தேய்பிறை, இடுகாடு, எரிதழல், ஊதுகுழல், புனைபெயர்
- வினைத் தொகையில் காலம் மறைந்து வரும்
பயன்பாடு
- எரிந்த, எரிகின்ற, எரியும் தழல் எரிதழல்- இது வினைத் தொகை. நேற்றும் எரிந்த தழல்; இன்று எரிகின்ற தழல், நாளை எரியும் தழல் என முக்காலமும் உணர்த்தும். எரிகின்ற தழலில் எண்ணெய் ஊற்றினாற் போல- எரிகின்ற என்பதில் காலம் வெளிப்படை. இது தொகையாகாது (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 பிப் 2011)
- ஆழ்கடல். இதனை வினைத்தொகை எனலாம். ஆழமாய் இருந்த கடல், ஆழமாய் இருக்கும் கடல், ஆழமாய்ப் போகும் கடல். (மொழிப் பயிற்சி-24: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 30 சன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வினைத்தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +