கட்டியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கட்டியம்(பெ)
- அரசர் முதலியோரின் வருகையின் முன்னறிவிப்பாக அவரைக குறித்துச் சொல்லும் புகழ்த்தொடர்
- கூத்து வகை
- முன்னறிவிப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!" என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது.
- இவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக்கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள்.(பொன்னியின் செல்வன், கல்கி)
- இசைவிழாவில் இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக இளம் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இளைஞர்கள் வரிசையில் பரத் சுந்தர், ரித்விக் ராஜா, திருச்சூர் சகோதரர்கள் மூவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தனர் என்பது மட்டுமல்ல, மூத்த கலைஞர்களாக வலம் வரப்போகிறார்கள் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். வருங்காலம் நிச்சயமாக இவர்கள் கையில்தான் இருக்கப் போகிறது என்று துணிந்து கட்டியம் கூறலாம். (முத்தாய்ப்பு, தினமணி, 6 சன 2013)
(இலக்கியப் பயன்பாடு)
- இருடியோர்கள் கட்டியம்பாட (திருப்பு. 730)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +