கண்டசுத்தி
பொருள்
கண்டசுத்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கண்டசுத்தி என்பது, ஒருவர் மனதில் எண்ணியதை, மற்றவர் தம் மனதால் கண்டுணர்ந்து பாடுவதாகும். 'கண்டசுத்தி' என்பதை, 'கண்டசித்தி' என்றும் கூறுவர்.
- அபிதான சிந்தாமணியில், (அந்தகக்) கவி வீரராகவ முதலியார், கண்ட சுத்தி பாடுவதில் வல்லவர் என்றும், ஈழ நாட்டில் பாடி, தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றார் என்றும் குறிப்பு உள்ளது. அவர் பாடிப் பரிசுபெறும் பொருட்டு ஈழ நாட்டுக்கு ஒருமுறை சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னன் ஒருநாள், சோலை சென்று உலாவியபோது கிளிகள் சில, ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து வெளியே வருவதும், பறந்து செல்லாமல் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாக இருப்பதைக்கண்டு காரணம் புரியாமல் மயங்கினான். கண்ட சுத்தியால், தன் மனதில் உள்ளதைப் புலப்படுத்துமாறு தன் அவைக்களப் புலவர்களிடம் கூறினான். அரசன் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுணர்ந்து பாடமுடியாத அவைக்களப் புலவர்கள், கண்டசுத்தி பாடுவதில் கவி வீரராகவ முதலியார் வல்லவர் என்று கூறி, அவரை மன்னனிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற கவி வீரராகவர், "வடவைக் கனலை" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.
- அடவிக் கதலிப் பசுங்குருத்தை
- நஞ்சுக் குழல்என்று அஞ்சியஞ்சி
- அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்டு
- அகலா நிற்கும் அகளங்கா!
- என்ற வரிகளால், அரசன் மனதிலுள்ள சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினார்.
- பாடலுக்கான பொருள் இதுதான். கிளிகள் மரத்தில் கூடுகட்டி வாழ்கின்றன. அம் மரத்தின் அருகே வாழை மரம் ஒன்று உள்ளது. அவ் வாழை மரத்தின் பசுங்குருத்து, கிளிகள் இருந்த கூட்டின் பக்கத்தே அசைந்து கொண்டு இருந்தது. கூட்டில் இருந்த கிளிகளுக்கு, அப் பசுங்குருத்து பாம்பாகத் தெரிந்தது. அதனால் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், அஞ்சிக் கூட்டுக்குள் சென்றன. பாம்பு போயிருக்கும் என்று நினைத்து, மீண்டும் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், மறுபடியும் பசுங் குருத்தைப் பாம்பாக நினைத்து மயங்கி, அது (பாம்பு) போகவில்லை என்று எண்ணி மீண்டும் கூட்டுக்குள் சென்றன. (கண்ட சுத்தியும் கவிவீரராகவரும்! தமிழ்மணி, 11 மார்ச்சு 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கண்டசுத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி