கருப்பக்கிருகம்

தமிழ்

தொகு
 
கருப்பக்கிருகம்:
கருநாடகம் பேலூரில் சென்னகேசவப்பெருமாள் கோவிலின் கர்பக்கிருகம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---गर्भगृह--க3ர்ப4க்3ருஹ--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • கருப்பக்கிருகம், பெயர்ச்சொல்.
  1. மூலத்தானம்
  2. கருவறை
  3. கோயிலாழ்வார்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sanctum sanctorum of a temple

விளக்கம்

தொகு
  1. இந்துக் கோவில்களில் அந்தந்த தெய்வங்களில் கற்சிலைகள் உயிர்ப்பித்தல்--ப்ராண ப்ரதிஷ்ட்டை என்னும் முறையால் நிறுவப்பட்டிருக்கும் அறைதான் கருப்பக்கிருகம் எனப்படுகிறது...இந்தச் சிலாவிக்கிரகங்களுக்கு மூலவர் என்றுப்பெயர்...இவருக்கு நித்திய ஆராதனைகள்/உபசாரங்கள்/பூசைகள் நடத்தப்படும்...உற்சவக் காலங்களில்/மற்ற நாட்களில் மக்களின் பொது தரிசனத்திற்காக கருப்பக்கிருகத்தைவிட்டு மூலவரை வெளிக்கொணர ஏலாது...இந்த நோக்கத்திற்காக, அதே தெய்வத்தின் உற்சவர் என்றழைக்கப்படும் நகர்த்தக்கூடிய உலோக விக்கிரகம் உயிர்ப்பித்து வைக்கப்பட்டிருக்கும்...உற்சவ விக்கிரகத்தை கருப்பக்கிருகத்தின் உள்ளே அல்லது வெளியே வைத்திருக்கலாம்...பல பெரிய இந்துக் கோவில்களின் கருப்பக்கிருகங்களினுள்ளே செல்ல பூசாரிகள்/அர்ச்சகர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது...நிழற்படம் எடுக்கவும் கூடாது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்பக்கிருகம்&oldid=1641267" இலிருந்து மீள்விக்கப்பட்டது