அரிசி அல்லது இரவை, பலவிதமான காய்களின் துண்டுகள், பருப்பு, தானியங்கள், தயிர், பால், நெய், மசாலாச் சாமான்கள் முதலிய எல்லா உணவுப் பொருட்களையும் பலவேறு வகைகளானக் கலவைகளில், குறிப்பிட்ட விதாச்சாரப்படிக் கலந்து சமைத்து, தேவையான தாளிதம் செய்து, இந்தியாவெங்கும் சாப்பிடப்படும் உணவுவகை கிச்சடி யாகும்...சில/பல பொருட்களைச் சேர்த்துக் கலந்து அல்லது ஒரு பொருளுக்குமட்டும் முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்படும் உணவு...கிச்சடி அந்தந்த இந்தியப் பிரதேச வழக்கப்படி விதவிதமாகத் தயாரிக்கப்பட்டு சாப்பிடப்படுகிறது...