குழிப்பந்தாட்டம் எனும் விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் பிரித்தானியாவின் ஒரு மாநிலமான இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது...இதில் பந்தைத் தள்ளும்/அடிக்கும் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும்... இந்த அடிகோலினால் (கிளப்), குழியாட்டப் பந்தை மைதானத்திலுள்ள இடையூறுகளில் அகப்பட்டுக்கொள்ளாமல் சிறிய குழிகளுக்குள் தள்ளுவதே ஆட்டம்...பொதுவாக நன்கு பராமரிக்கப்பட்டு, கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஓர் ஆட்டமைதானம் (கோர்சு)...இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தள்ளுகை/தட்டுதல் அல்லது அடிகள் (Stroke) மூலம், பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவராவார்... ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார்-par அல்லது சமம் எனப்படும் மதிப்பு உண்டு...இது 3 இலிருந்து 5 வரை இருக்கும்...18 குழிகளுள்ள ஓர் ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் பார்-par சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும்... ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்...அதிகபட்சக் குழிகளுள்ள, மிகப்பெரிய ஆட்ட மைதானத்தில்,வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு...இந்தக் குழிப்பந்தாட்டம் வணிக உலகில் மிகவும் மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்...
இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை...இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது...தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்...