இன்றும் அதிருஷ்டம், பாக்கியம் என்ற பொருட்களில் பேச்சு வழக்கில் குடுப்பினை என்று வழங்கப்படுகிறது...முற்பிறவிகளில் நல்வினைகளைச் செய்து கொடுத்து (அதாவது இறைவனிடம் நம் கணக்கில் போட்டு) வைத்திருந்தால் இப்பிறவியில் எதிர்பாராது மிக நல்ல விளவுகளைத் தரும் என்பது நம்பிக்கை.
பெண்ணை பிற குடும்பத்தில் மணமுடித்துத் தருவதையும் கொடுப்பினை என்பர்...
நாளும் மூன்று வேளை உணவு கிடைக்க அவனுக்குக் கொடுப்பினை இல்லை. அவன் கொடுத்து வைத்தவன். நன்றாகவே வாழ்கிறான்.
வெங்கடசுப்பன் வீடு மிக வசதியானது...அவருடைய மகன் இரகுவும் மிக நல்லவன், நன்றாகவும் இருக்கிறான்...கை நிறைய சம்பாதிக்கிறான்...நமக்குத்தான் அவனுக்கு நம் சுனிதாவை கட்டிவைக்க கொடுப்பினை இல்லை...