ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாக்கியம் (பெ)

  1. நல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு
  2. விதி, பேறு, அதிர்ஷ்டம், பாக்கியம் புண்ணியம்.
  1. செல்வம்
  2. கஷாயம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blessing, fortune; happy destiny, good fortune, auspicious fate
  2. destiny
  3. prosperity, wealth
  4. decoction, infusion
விளக்கம்
பயன்பாடு
  • இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்! (பொன்னியின் செல்வன், கல்கி)
  • தேவி! தங்கள் சித்தம் என் பாக்கியம்! (பொன்னியின் செல்வன், கல்கி)
  • இவ்வளவு வனப்பும் வளமும் பொருந்திய இடம் இந்த உலகில் வேறு எங்கேனும் இருக்க முடியுமா? இப்படிப்பட்ட நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்? (பொன்னியின் செல்வன், கல்கி)
  • உலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது (புன்னைவனத்துப் புலி, கல்கி)
  • நினைக்க அவனையே நேரில் காணுவதுபோல் மனசில் சிறிது சந்தோஷம் தோன்றுகிறதே! அவனை நேரில் பார்க்கும் பாக்கியம் என்றைக்குக் கிடைக்குமோ? (மன நிழல், புதுமைப்பித்தன்)
  • மணாளனே மங்கையின் பாக்கியம் (திரைப்படத்தின் பெயர்)

(இலக்கியப் பயன்பாடு)

  • அதனைப் பவ ரறியார் பாக்கியத்தால் (குறள், 1141)
  • ஞாலமுடையார் பெறுகுவர் பாக் கியமே (சிவப். பிர. சிவஞான. கலம். 51)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாக்கியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாக்கியசாலி - விதி - நல்வினை - செல்வம் - அதிருஷ்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாக்கியம்&oldid=1998006" இலிருந்து மீள்விக்கப்பட்டது