கொட்டாவி
கொட்டாவி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சோர்வு, தூக்கம் வருதல் காரணமாக வாயை அகலத் திறந்து வெளிவிடும் நெட்டுயிர்ப்பு; வாயாவி
- கொட்டாவி விடு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன் (அகல் விளக்கு, மு. வரதராசனார்) - I lay on bed again, yawning
- மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது (அகல் விளக்கு, மு. வரதராசனார்) - With mental fatigue affecting the body as well , I yawned and yawned even before 10 p.m. that night.
- எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுகிறவன் (பழமொழி)
- நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல் இவையும் பெரியார் முன் செய்யாரே (ஆசாரக் கோவை)
- கொட்டாவி கொள்கின்றான் (திவ். பெரியாழ். 1, 4, 6)