இஃதொரு பேச்சுச் சொல்...இந்துக் கோவில்களில் இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் பிரசாதம் எனப்படும்...புளியோதரை, தத்தியோன்னம், சுண்டல் போன்றப் பிரசாதங்களை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகிப்பர்...இந்த உணவுப்பொருட்களை கலயத்திலிருந்து வலக்கையின் ஐந்துவிரல்களைக் குவித்து எடுத்தோ அல்லது ஒரு சிறு கரண்டியால் எடுத்தோ, வந்திருக்கும் எல்லா பக்தர்களுக்கும் கிடைக்கவேண்டும் எனும் உணர்வில் சிறு அளவாகப் பகிர்ந்து அளிப்பர்...இப்படி அளிக்கும் உணவு பசியாற்றவோ, வயிறு நிரப்பவோ சற்றும் போதாது...இதைப்போல சமூகத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் உணவு போதாமல், மிகவும் குறைவாகயிருந்தால் கோவில் பிரசாதம் போல என அதை நகைச்சுவையாக வருணிப்பர்...
நான் சாப்பிட என் தாத்தா வீட்டிற்குப் போகவேமாட்டேன்...அங்கு கோவில் பிரசாதம் போல சாப்பாடு போடுவார்கள்...அது என் வயிற்றிற்கும் வாயிற்கும் பற்றாது...அதைவிட சும்மா பட்டினியே கிடக்கலாம்!!